ஆண்கள் ஆண்மையை அதிகரிக்க என்னென்ன செய்யலாம்..?

ஆண்கள் ஆண்மையை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்பதை கீழே பார்க்கலாம்.

தினமும் காலை, மாலை சுமார் 20 நிமிடம் எளிய உடற்பயிற்சிகளை அதாவது நடத்தல், குனிந்து நிமிர்தல், நீந்துதல், உட்கார்ந்து எழுதல், மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டுதல், கை கால் விரல்களை நீட்டி மடக்குதல், ஜாக்கிங், ஸ்கிப்பிங், ஜம்பிங், மூச்சுப் பயிற்சி போன்றவை செய்யலாம்.

இதனால் உடல் உறுதியும், நரம்புகள், எலும்புகள் பலமும் பெறும். தினமும் 7 அல்லது 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் வேண்டும். கோபத்தையும், கவலையையும் நீக்கி, சாந்தமான மனநிலையில் இருத்தால் நமது மொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும். 15 நாட்களுக்கொரு முறை தான் விந்துவை வெளிப்படுத்துதல் வேண்டும் என்று சிலர் கூறுவது மிகவும் தவறான விஷயம் ஆகும். இது சற்று வயது முதிர்ந்தவர்களுக்குப் பொருந்தும்.

ஆனால் இளவயதில் உள்ளவர்கள் 14- தொடக்கம் முதல் 35 வயது வரை உள்ளவர்கள், வாரத்தில் 4 முறைகூட விந்தை வெளிப்படுத்தலாம். பேரீச்சம் பழம் மிகவும் அருமையான மருந்தாக அமைகிறது. பேரீச்சம் பழம் என்பது எல்லாக் கடைகளில் விற்கும் பேரீச்சம்பழத்தை நினைக்கவேண்டாம். பொதுவாக அரபு நாடுகளில் இப்பழத்தை எடுத்து பிழிந்து அதில் உள்ள சர்க்கரைத் தண்ணீரை எடுத்துவிட்டுப் பின்னர் அதன் சக்கையைதான் வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள்.

இது உண்மையான பேரீச்சம்பழம் அல்ல. பொதுவாக நல்ல கடைகளில் உலர்ந்த பேரீச்சம்பழம் கிடைக்கும். அதனை வாங்கி பாலுடன் உட்கொண்டால் போதும். தினமும் 5 பேரீச்சம்பழத்தை பாலுடன் உட்கொண்டு வந்தால் 15 நாட்களில் உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.

அத்தோடு பாதாம் பிஸ்தா போன்றவையும் உண்ணலாம். கோழி ஆட்டு இறைச்சி போன்ற உணவுகளைத் தவிர்த்து, சுறா மீன், காடை மற்றும் நண்டு போன்ற உணவுகளை உண்ணலாம். இதில் ஆண்மையை அதிகரிக்கும் பல தாதுப் பொருட்கள் அடங்கியுள்ளது.