முருங்கைக்கீரைக்கு இவ்வளவு சக்தி உண்டா?

கொரோனா வைரஸ் நோய் என்ற கொடிய வராமல் தடுப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தி உள்ள இயற்கை உணவுகளை உண்பது அத்தியாவசியமாகிறது. அப்படி பரிந்துரை செய்துள்ள இயற்கை உணவுகளில் ஒன்று தான் முருங்கைக்கீரை.

கொரோனா வைரஸ் நோய் என்ற கொடிய அரக்கன் உலக மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. இந்த நோய்க்கு இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் இந்த நோய் வராமல் தடுப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தி உள்ள இயற்கை உணவுகளை உண்பது அத்தியாவசியமாகிறது. உலக சுகாதார நிறுவனமும் இதனையே பரிந்துரை செய்திருக்கிறது.

அப்படி பரிந்துரை செய்துள்ள இயற்கை உணவுகளில் ஒன்று தான் முருங்கைக்கீரை. நாம் அன்றாடம் வீடுகளிலும், தோட்டங்களிலும், வயல் வரப்புகளிலும், காடுகளிலும் வளரும் முருங்கை மரம் எவ்வளவு சக்தி வாய்ந்த ஒரு மாமருந்து என்பது கொரோனாவுக்கு பின்னர் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.

முருங்கையில் வைட்டமின்-ஏ ஆனது கேரட்டில் உள்ளதை விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. வைட்டமின் பி2 ஆனது வாழைப்பழத்தில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக உள்ளது. வைட்டமின் பி3 ஆனது வேர்க்கடலையில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக உள்ளது. முருங்கையில் கால்சியம் சத்து பாலில் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது. முருங்கையில் புரோட்டீன் சத்து பாலில் உள்ளதை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.

முருங்கையில் மெக்னீசியம் சத்து முட்டையில் உள்ளதைவிட ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது. அதனால் தான் எந்த மாதிரி கொடிய வைரசையும் சமாளிக்கும் எதிர்ப்பு சக்தியில் முதலிடம் வகிக்கிறது இந்த முருங்கை. நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால் நம்மை எந்த வைரஸும் ஒன்றும் செய்ய இயலாது.

மார்க்கெட்டில் 10 ரூபாய்க்கு- கிடைக்கும் முருங்கைக்கீரை அல்லது இரண்டு முருங்கைக்காய் போதும் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உபயோகித்தால் நாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு உயர்த்திக் கொள்ளலாம். முருங்கைக்கீரையை சூப் செய்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடனடியாக கிடைக்கிறது. முருங்கைக்காய் உண்டால் கிழவன் கூட வெறும் கையோடு தான் நடப்பான் என்ற பழமொழிக்கு ஏற்ப முருங்கையை உண்டு என்றும் இளமையுடன் வாழ்வோம்.