பக்கவாதத்தை கட்டுப்படுத்தணுமா? இந்த யோகாக்களை தொடர்ந்து செய்ங்க..!

யோகா என்பது ஒழுக்கம் என்ற பொருளைக் குறிக்கும். நாம் நமது மனதைக் கட்டுப்படுத்தி நம் உள்ளே இருக்கின்ற ‘இறை சக்தி’யை அல்லது ‘இறை தன்மை’யை அறிய உதவும் பயிற்சி தான் யோகா பயிற்சியாகும்.

முறையாகத் தொடர்ந்து செய்யப்படும் யோகா மூளைக்கு சீரான இரத்த ஒட்டத்தையும் மூளைக்கு புத்துணர்ச்சியையும் தரக் கூடியது. இதனால் மூளையில் செயல் திறன் அதிகரிக்கின்றது. உடலின் செயல்பாடுகள் சீராகுகின்றன.

தூக்கமின்மை, ஒய்வின்மை கவனக் குறைவு குழப்பமான மனநிலை தேவையற்ற பயம் ஆகியவை மூளையின் செயல்பாட்டிற்கு இடையூறு தரக் கூடியவை. யோகா இவற்றை போக்கி இத்தகைய பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான மனநிலையையும் நல்ல மூளைச் செயல்பாட்டையும் ஞாபக சக்தியையும் தருவதாக யோகா பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முதுமை காரணமாக பக்கவாதம் தாக்கியவர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டால் எளிதில் அவர்களின் உடல்நிலை சரியாவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. பக்கவாத நோய் தாக்கியவர்கள் சிலருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டதில் 35 சதவிகிதம் வரை அவர்கள் நோயிலிருந்து மீண்டிருப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

இது தொடர்பாக இன்டியான பல்கலைக்கழகமும், ப்ரூடே பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் வியக்கத்தக்க உண்மைகள் கண்டறியப்பபட்டுள்ளன.

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா பயிற்சி தன்னம்பிக்கையும், உற்சாகத்தையும் அளித்ததோடு உடல் நலத்தையும் சரிசெய்துள்ளதாக அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவினை பற்றி அறிந்த ஏராளமானோர் யோகா பயிற்சியை ஆர்வமுடன் செய்யத் தொடங்கியதாக ஆய்வாளர் ஏர்லைன் ஸ்மீத் தெரிவித்துள்ளார். பக்கவாத நோய் தாக்குதல் குறித்த அச்சஉணர்வின்றி அவர்கள் மகிழ்ச்சியுடன் யோகா பயிற்சி மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து யோகா பயிற்சி செய்பவர்களுக்கு நோய் தாக்குவது குறைகிறது. எதிர்பாராதவிதமாக பக்கவாதம் தாக்கியவர்கள் பயிற்சி மேற்கொண்டால் அவர்களின் முதுமை தள்ளிப்போடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.