சுவையான மட்டன் பொடிமாஸ் செய்வது எப்படி?

மட்டனில் குழம்பு, கிரேவி, வறுவல், பிரியாணி என பலவகையான ரெசிப்பிகளைப் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் இன்று சுவையான மட்டன் பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மட்டன் – 1/4 கிலோ

பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 10 பல்
தேங்காய் துருவல் – கால் கப்
பொட்டுக்கடலை – 1/2 கப்
சோம்பு – 1 ஸ்பூன்
கசகசா – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1ஸ்பூன்
மல்லி தூள் – 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
பட்டை – 4 துண்டு
கிராம்பு – 6
கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

கறியுடன் உப்பு, மஞ்சள், தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.

பெரிய வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து வாணலியில் சோம்பு , பொட்டுக்கடலை, கசகசா சேர்த்து வதக்கி மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்

வேக வைத்த மட்டனை உதிர்த்து, பொட்டுக்கடலை பொடி, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு வெடித்ததும் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கிய பின்னர் அதில் பிசைந்து வைத்த மட்டனை சேர்த்து கிளறவும்.

நன்கு உதிரியாக வந்ததும் எலுமிச்சை சாறி பிழிந்து இறக்கினால் சுவையான மட்டன் பொடிமாஸ் ரெடி.