குழந்தைகள் விரும்பும் ஹோட்டல் ஸ்டைல் சில்லி பிரெட்டை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
பிரெட் ஸ்லைஸ் – 10
தக்காளி சாஸ் – ஒரு தேக்கரண்டி
சிவப்பு கேசரி கலர் – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
எலுமிச்சை ஜுஸ் – சிறிதளவு
கரம் மசாலா தூள் – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 2
தக்காளி – 2
கீறிய பச்சை மிளகாய் – 3
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
நெய் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிரெட்டை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வாணலியில் நெய் விட்டு வறுத்துக் கொள்ளவேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கிய பின் தக்காளி போட்டு வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் தக்காளி சாஸ், சிவப்பு கேசரி கலர், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும்.
பின்னர் வறுத்த பிரெட் துண்டுகள், உப்பு போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.
பரிமாறும் முன் கொத்தமல்லி இலை, எலுமிச்சை ஜுஸ், சிறிது வெங்காயம் சேர்த்து பரிமாறவும்.
சூப்பரான சில்லி பிரெட் ரெடி.