இந்த அறிகுறிகள் தென்பட்டால்.. உங்களுக்கு பணக்கஷ்டம் வரப்போகிறது..!

பொருளாதாரரீதியாக உங்களுக்கு ஏற்பட போகும் சரிவையும், பணக்கஷ்டம் ஏற்பட போவதையும் முன்கூட்டியே அறிவிக்கும் அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி தகுந்த காரணமும், எச்சரிக்கையும் இன்றி நம் வாழ்வில் எந்தவொரு சம்பவமும் நடப்பதில்லை. நல்ல நேரமோ, கெட்ட நேரமோ எதுவாக இருந்தாலும் அது நடப்பதற்கு முன் சில அறிகுறிகளை நமக்கு காட்டும். நாம் அப்போதே சுதாரித்து கொள்ள வேண்டும். இல்லையேல் அது மிகபெரிய தீமைகளை நமக்கு ஏற்படுத்தும். இந்த பதிவில் பொருளாதாரரீதியாக உங்களுக்கு ஏற்பட போகும் சரிவையும், பணக்கஷ்டம் ஏற்பட போவதையும் முன்கூட்டியே அறிவிக்கும் அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

  • உங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புகள் அடிக்கடி பழுதடைந்தாலும், அதற்கு கவனிப்பு தேவைப்பட்டாலும் அது ஒரு கெட்ட சகுனத்தின் அறிகுறியாகும். இது உங்களின் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படப் போகிறது என்பதை உணர்த்தும் சமிஞ்ஞையாகும்.
  • ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவியிடையே சண்டை ஏற்படுவது என்பது சாதாரணமானது. ஆனால் அந்த சண்டை காரணமே இல்லாமல் வழக்கத்திற்கு மாறாக ஏற்பட்டால் உங்களுக்கு திடீர் பணச்சிக்கலோ அல்லது வியாபாரத்தில் நஷ்டமோ ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
  • சிலசமயங்களில் உங்களின் தேக ஆரோக்கியமும் உங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட போகிறது என்பதை உணர்த்தும். அதீத பதட்டம், வயிறு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டால் பண பிரச்சனை ஏற்பட போகிறது என்பதன் அறிகுறியாகும்.
  • ஜோதிட சாஸ்திரத்தின்படி வாழ்க்கையில் மிக பெரிய நிதி நெருக்கடிக்கு ஆளாக போகிறவர்களுக்கு வாயில் அதிகபடியான உமிழ்நீர் சுரக்குமாம். வழக்கத்திற்கு மாறாக அவர்கள் பேசும்போது வாயிலிருந்து அதிக உமிழ்நீர் வெளியேறுமாம். இது அவர்களுக்கு நஷ்டம் ஏற்படபோவதை உணர்த்தும் நிச்சயமான அறிகுறியாகும்.
  • உங்கள் வீட்டில் ஏதேனும் உயிர்பலி நடந்தால் அதனால் உங்களுக்கு பணபிரச்சனையை ஏற்படுத்தும் அறிகுறியாகும். அதிலும் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் மரணமடைந்தால் நிச்சயம் நீங்கள் பெரிய அளவில் நஷ்டத்தை எதிர்கொள்ள போகிறீர்கள் என்று அர்த்தம்.
  • உங்கள் வீட்டின் மேல் தண்ணீர் தொட்டி இருந்தாலும், இல்லாவிட்டாலும் மேற்கூரையிலிருந்து தண்ணீர் தொடர்ந்து ஒழுகுவது உங்கள் குடும்பம் பெரிய பணக்கஷ்டத்தில் சிக்கப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறியாகும்.
  • ஒரு கருப்பு மச்சம் உங்கள் கையில் தீடீரென தோன்ற ஆரம்பித்தால் நீங்கள் இதுவரை சேர்த்து வைத்த உங்களின் அனைத்து சேமிப்புகளும் இழக்க போகிறீர்கள் என்று அர்த்தம். இதற்கு காரணம் உங்களுடைய கூட்டாளிகள் சரியில்லாமல் போவதுதான்.
  • உங்கள் வீட்டின் முன்புற கதவில் எந்தவொரு காரணமும் இல்லாமல் ஒரு விரிசல் ஏற்பட்டால் உங்கள் குடும்பத்தின் மீது மிகப்பெரிய கடன்சுமை ஏற்பட போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறியாகும்.
  • தங்கத்தை தொலைத்தாலோ அல்லது அடிக்கடி ஞாபகமறதியால் தவறான இடத்தில் வைத்தாலோ நீங்கள் உங்கள் நெருங்கிய உறவினராலோ அல்லது நண்பராலோ ஏமாற்றப்பட்டு உங்கள் செல்வத்தை இழக்க போகிறீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறியாகும்.

மேற்கண்ட காரணங்கள் உங்களுக்கு பணக்கஷ்டம் ஏற்பட போவதன் அறிகுறிகளாகும். இவற்றை தவிர்க்க முன்பே திட்டமிட்டோ அல்லது உடனே சுதாரித்தாலோ பணகஷ்டம் ஏற்படுத்தும் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

Source: Maalaimalar