வாழைப்பழத்தில் மிக அதிகமாக பொட்டாசியம் இருப்பதால் ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்த வாழைப்பழம் மிக முக்கியம். அல்சர் இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அல்சரின் தாக்கம் குறைக்கப்பட்டு வயிற்றில் ஏற்படும் எரிச்சல் குறையும்.
மனித இனத்தை நேரடியாக பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. சுற்றுச்சூழல் மாசுபடுவது, வாயு மண்டலம் சூடாவது, ஓசோன் படலம் தேய்ந்த அதன் வழியே புற ஊதாக்கதிர்கள் பூமியை அடைவது, பனிப்பொழிவில், பருவமழையில் அமிலத்தன்மை அதிகரிப்பது, நன்னீர் ஆதாரங்கள் நஞ்சாவது இப்படி நாடறிந்த பல சிக்கல்களை மனித இனத்துக்கு நேரடி பாதிப்புகள் நிறைய.
ஆனாலும் அறிஞர்கள் உயிரினங்கள் அழிக்கப்படுவதைத்தான் முதன்மையான பிரச்சினையாக நினைத்தார்கள். உயிரின வலைப்பின்னல் கண்களுக்கு புலப்படாத ஒன்று. அந்த பின்னலில் கட்டெறும்பு முதல் காண்டாமிருகம் வரை எல்லாமே மனித இனத்தோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. இந்த பின்னலின் கணுக்கள் ஒவ்வொன்றாக அறுந்து கொண்டே வந்தால், கடைசியில் மனித இனமும் மடிந்து போக வேண்டியது தான் என்பதை அந்த அறிஞர்கள் உணர்ந்து இருந்ததே இதற்கு காரணம். எனவே தான் மனித வாழ்க்கையையும் மரங்களோடு ஒப்பிட்டு வாழையடி வாழையாய் வாழ்க என வாழ்த்துகிறோம்.
சுக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் ஆகிய மூன்று சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளன. ஒரே ஒரு வாழைப்பழம் நாம் 90 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய தேவையான சக்தியை கொடுக்கிறது. வாழைப்பழத்தில் இருந்து ட்டிரைடோபான் என்ற புரோட்டீன் நமது ரத்தத்தின் செரடோனின் என்ற ஒரு ஹார்மோனை உண்டாக்கி டிட்ரசன் லிருந்து நம்மை வெளிக்கொண்டு வருகிறது.
ஒரு வாழைப்பழத்தில் இருக்கும் பி6 என்ற வைட்டமின் நமது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் லெவலை அதிகப்படுத்தி புத்துணர்ச்சியை கொடுக்கும். வாழைப்பழத்தை சாப்பிடுவதால் நமது ரத்தத்தில் ஹீமோக்கோபின் அதிகரிக்கிறது. வாழைப்பழத்தில் மிக அதிகமாக பொட்டாசியம் இருப்பதால் ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்த வாழைப்பழம் மிக முக்கியம். அல்சர் இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அல்சரின் தாக்கம் குறைக்கப்பட்டு வயிற்றில் ஏற்படும் எரிச்சல் குறையும்.
சிகரெட் மற்றும் புகையிலையில் இருந்து விடுபட விரும்புபவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் அதில் இருக்கும் பி6 மற்றும் பி12 என்ற வைட்டமின்கள் அவர்களை மீண்டும் சிகரெட் பிடிக்கவோ அல்லது புகையிலை சாப்பிடவோ தூண்டாது. வாழைப்பழத்தில் ஆப்பிளைவிட நான்கு மடங்கு புரோட்டீன், இரண்டு மடங்கு கார்போஹைட்ரேட், மூன்று மடங்கு பாஸ்பரஸ், ஐந்து மடங்கு இரும்புத்தாது மற்றும் இரண்டு மடங்கு விட்டமின்களும் மினரல்களும் இருக்கின்றன.