பிப்ரவரி 14-ந்தேதியான இன்று காதலர் தினம் எப்படி வந்தது என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை… அவர்கள் தெரிந்துகொள்ளும் வகையிலேயே காதலர் தினம் எப்படி உருவானது என்பது குறித்தே இந்த செய்தி….
இன்று காதலர் தினம் உலகம் முழுவதும். காதலர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு, பிப்ரவரி மாதம் பிறந்ததும் நினைவுக்கு வருவது காதலர் தினம்தான். ஒவ்வொருவரும் தனது காதலிக்கு என்ன பரிசு கொடுக்கலாம் அவரின் அன்பை எப்படி பெறலாம், இன்றைய பொழுதை எவ்வாறு சந்தோஷமாக கழிக்கலாம் என்று சிந்தித்து இன்றைய பொழுத்தை போக்கி வருகின்றனர்.
ஆனால், பிப்ரவரி 14-ந்தேதியான இன்று காதலர் தினம் எப்படி வந்தது என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை… அவர்கள் தெரிந்துகொள்ளும் வகையிலேயே காதலர் தினம் எப்படி உருவானது என்பது குறித்தே இந்த செய்தி.
பிப்ரவரி 14ம் தேதி மத்திய இங்கிலாந்தில் பறவைகள் மூலம் ஜோடிகளைத் தேர்வு செய்த ஆங்கிலேய பழமைவாதிகளின் இந்த நாளையே காதலர் தினமாக கொண்டாடுவதாக சிலர் கூறுகின்றனர்.
இருப்பினும், ரோமானிய அரசனின் ஆட்சிக் காலத்தில்தான் காதலர் தின கொண்டாட்டம் தொங்கியதாக வரலாறுகள் கூறுகிறது.
ரோமானிய அரசனாக கிளாடிஸ் மிமி ஆட்சி புரிந்தபோது, ‘ரோமாபுரி நாட்டில் இனி எவருமே திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று அறிவித்தாராம்.
இதை கேட்ட ரோமானியர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகினர். காதலிக்கும் வாலிபர்கள் காதலியை பிரிந்து வர தயங்கினர்.
அரசனின் எதிர்ப்பை மீறி ரோமானிய பாதிரியார் வாலன்டைன் என்பவர் ரகசியமாகத் திருமணங்களை நடத்தி வைத்தார்.
இதையறிந்த மன்னன் வாலண்டைனை கைது செய்து சிறையில் அடைத்தான். மரணதண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது.
இடைப்பட்ட காலத்தில் சிறையில் இருந்த பாதிரியார் வாலண்டைனுக்கும் சிறைக் காவலர் தலைவனின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் காதல் மலர்ந்துள்ளது.
வாலண்டைனை விடுவிக்க அஸ்டோரியஸ் முயன்றாள். இதை அறிந்த சிறைத் துறைத் தலைவன், தனது மகளை வீட்டுச் சிறையில் வைத்தான்.
ஆனால், வாலண்டைன், அனைத்து காவலையும் மீறி, அந்த கண் தெரியாத இளம்பெண்ணுக்கு காகித அட்டை ஒன்றின் மூலம் செய்தி அனுப்பினார்.
இந்த வரலாறு உண்மையாக இருக்குமானால், முதல் காதலர் வாழ்த்து இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
இந்த கடிதத்தை படிக்கும் அதே நேரத்தில் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்திரவதை செய்தசூ பின் வாலண்டைனின் தலை துண்டிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இது நடைபெற்றது பிப்ரவரி மாதம் 14ம் தேதி. ஆகவே அன்றைய தினத்தையே, காதலின் சின்னமாக வாலன்டைன்ஸ் டேவாக கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.
சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு போப்பாண்டவர் ஜெலாசியஸ் மி வாலண்டைனை புனிதராக அறிவித்தார். அன்றிலிருந்து வாலண்டைன் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.