இந்த மந்திரத்தை செவ்வாய்க்கிழமைகளில் உச்சரிங்க.. உங்கள் கஷ்டங்களை காணாமல் போய்டும்..!

செவ்வாய்க்கிழமைகளில் அல்லது தினமும் இந்த மந்திரத்தை மனம் உருகி இந்த 6 முறை உச்சரித்தால் போதும். முருகப்பெருமானே இறங்கி வந்து உங்கள் கஷ்டங்களை தீர்த்து வைப்பார் என்பது நிச்சயமான உண்மை.

இந்த மந்திரத்தை உச்சரித்தால் பல கோடி புண்ணியம் நமக்கு கிடைப்பதோடு, வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்ள் அனைத்தும் விலகி, துயரங்கள் இல்லாத வாழ்க்கையை வாழ முடியும். வெறுமனே வாயால் இந்த மந்திரத்தை உச்சரித்தால் மட்டும் போதாது. அந்த முருகப்பெருமானே முழுமையாகச் சரணடைந்து, நம்முடைய ரத்தத்திலும் சதையிலும் முருகப்பெருமானின் நாமம் கலந்து, எல்லாம் அவன்தான் என்ற நம்பிக்கையோடு உச்சரிக்க வேண்டிய மந்திரம் இது. அருணகிரிநாதர் அருளிய முருகப்பெருமானின் மந்திரம் உங்களுக்காக இதோ!

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒலியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

பொருள் – உருவமும் நீ தான், உருவம் இல்லாத அருவமும் நீ தான், இருப்பதும் நீ தான், இல்லாததும் நீ தான், மலரும் நீ தான், மலருக்கு முன் இருக்கும் அரும்பும் நீ தான், ஒளியும் நீ தான், ஒலியும் நீ தான், கருவும் நீ தான், கருவிலிருந்து பிறக்கும் உயிரும் நீ தான், எல்லோருக்கும் குருவும் நீ தான், உன்னையே கெதி என்று உன் பாதங்களில் சரணடைகின்றேன் முருகா! என்பது தான் இதற்கு அர்த்தம்.

நல்லது கெட்டது, இருப்பது இல்லாதது, என்ற பாகுபாடு இல்லாமல் எல்லாமும் அவனே, எல்லா செயல்பாடிற்க்கும் பின்னால் அவன் தான் இருக்கின்றான் என்று, முருகப்பெருமானை சரணடைந்து, என் வாழ்க்கையை நீயே பார்த்துக்கொள் என்று, உங்களுடைய வாழ்க்கையை முருகப்பெருமானிடம் ஒப்படைத்துவிட்டு, அதன் பின்பு அன்றைய தினத்தை தொடங்க ஆரம்பியுங்கள்.

காலை இறை வழிபாடு செய்யும் போது, முருகப் பெருமானை நினைத்து 6 முறை இந்த மந்திரத்தை உச்சரிப்பது நல்ல பலனைக் கொடுக்கும். முடிந்தவர்கள் இந்த மந்திரத்தை மனப்பாடம் செய்துகொண்டு உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உச்சரித்துக் கொண்டே இருந்தால், உங்களை விட பாக்கியசாலி, உங்களை விட அதிர்ஷ்டசாலி இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லை.