மூக்குக்கு மேல் கோபம் வருகிறதா..? உடனே இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரிங்க போதும்..!

கோபத்தை குறைக்கவும், நிதானத்தை வரவழைக்கவும் இந்த மந்திரங்கள் பயனுள்ளதாக இருக்கும். இதை எப்படி உச்சரிக்க வேண்டும்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

வீட்டில் வடகிழக்கு திசையாகிய ஈசானிய மூலையை ஆதிக்கம் செலுத்துபவளும், அம்பாளின் தோளிலிருந்து உதித்தவளும் ஆன ஈஸ்வரி என்பவள் தான். இவளின் காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு கோபம் குறைந்து நிதானம் உண்டாகும் என்பது நியதி. மகேஸ்வரி காயத்ரி மந்திரம் 108 முறை தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். இதனை வீட்டின் வடகிழக்கு திசையைப் பார்த்தவாறு அமர்ந்து கொண்டு உச்சரித்து பாருங்கள். நிச்சயம் உங்களுடைய கோபமான குணம் மாறும்.

இதோ உங்களுக்கான மஹேஸ்வரி மந்திரம்:

ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே!
சூல ஹஸ்தாயை தீமஹி!
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்.